கர்நாடகத்தில் புதிதாக 1,425 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,425 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 1,425 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 23 ஆயிரத்து 150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 1,198 பேருக்கும், மைசூருவில் 53 பேருக்கும், துமகூருவில் 18 பேருக்கும், பல்லாரியில் 15 பேருக்கும், தட்சிண கன்னடா, விஜயாப்புரா, பெலகாவியில் 12 பேருக்கும், தார்வாரில் 17 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 19 பேருக்கும், கோலாரில் 8 பேருக்கும், கலபுரகி, குடகில் தலா 7 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 5 பேருக்கும், பீதர், சிக்பள்ளாப்பூர், தாவணகெரேவில் தலா 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தார்வாரில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். ஒரே நாளில் 1,459 பேர் குணம் அடைந்தனர். 8 ஆயிரத்து 861 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.15 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com