ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 18 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 18 பேர் காயம்
Published on

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீரின் பர்மீனில் இருந்து உதம்பூர் மாவட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மினிபஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. மசோரா அருகே பஸ் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு உதம்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த பர்மீனைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் மேல்சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com