டெல்லியில் மேலும் 182 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 255 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மேலும் 182 பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. . இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 01 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 255 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 487 என்ற அளவில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com