கோவாவில் ரஷிய பெண் பாலியல் வன்கொடுமை: நேபாளத்தை சேர்ந்த இருவர் கைது

ரஷிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள நாட்டை சேர்ந்த இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
கோவாவில் ரஷிய பெண் பாலியல் வன்கொடுமை: நேபாளத்தை சேர்ந்த இருவர் கைது
Published on

பனாஜி,

கோவாவில் உள்ள கலங்குடேவில் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் ரூம் பாயாக 23 வயதான நேபாள நாட்டை சேர்ந்த இருவர் பணிபுரிந்து வந்தனர். அந்த ஹோட்டலுக்கு ரஷிய நாட்டை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது ஹோட்டலில் வைத்து அப்பெண்ணை ரூம் பாயாக பணிபுரிந்து வந்த இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் குற்ற செயலில் ஈடுபட்ட இருவரையும் கைதுசெய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com