கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 5,431- பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 95 ஆயிரத்து 059- ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 54 ஆயிரத்து 102-ஆக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 631 ஆக இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com