

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனால், மேற்கு வங்காளத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி முதல் மந்திரியானார்.
இவரது இளைய சகோதரர் ஆசிம் பானர்ஜி. சமீபத்தில் ஆசிமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் கொல்கத்தா நகரில் உள்ள மெடிக்கா சூப்பர்ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இதனை மருத்துவமனையின் தலைவரான டாக்டர் அலோக் ராய் தெரிவித்து உள்ளார்.