70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது வாலிபர்

உத்தர பிரதேசத்தில் 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

லலித்பூர்,

உத்தர பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த 70 வயது மூதாட்டி கடந்த புதன்கிழமை இரவு படுத்து தூங்கியுள்ளார். அவர் தனியாக வீட்டில் இருந்த நேரத்தில் 21 வயது வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார்.

வீட்டில் மூதாட்டியுடன் யாரும் இல்லாத நிலையில், அந்த வாலிபர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரது அலறலை அடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதன்பின்னர் கடந்த வியாழ கிழமை பார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி துணை ஆய்வாளர் திக்விஜய் சிங் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக அந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 70 வயது மூதாட்டியை 21 வயது வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தது அந்த பகுதியில் வசிப்போரிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com