தேசிய செய்திகள்
ஆந்திராவில் இன்று மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசின் 2ம் அலையின் பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,21,142 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 114  பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,800 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 2,09,134 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 23 ஆயிரத்து 098 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 13,02,208 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்