நிதிஷ்குமார் மந்திரிசபை விரிவாக்கம்: பீகாரில் 31 மந்திரிகள் பதவி ஏற்பு

பீகாரில் நிதிஷ்குமார் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 31 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2022-08-16 22:21 GMT

Image Courtacy: ANI

பாட்னா,

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கரம் கோர்த்து கடந்த வாரம் புதிய அரசு அமைத்துள்ளது. நிதிஷ்குமார் முதல்-மந்திரியாகவும், லாலுபிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்- மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

நேற்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தார். 31 மந்திரிகள் புதிதாக பதவி ஏற்றனர். அவர்களில் 16 பேர் ராஷ்டிரீய ஜனதாதளம், 11 பேர் ஐக்கிய ஜனதாதளம், 2 பேர் காங்கிரஸ், ஒருவர் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேச்சை ஆவார்.

ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியில் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவும் (வயது 34) மந்திரி ஆனார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் முந்தைய மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த மந்திரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரசில் ஒரு முஸ்லிமுக்கும், தலித்துக்கும் வாய்ப்பு அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்