உத்தரபிரதேசம்: சொகுசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் சாலையோரம் நின்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
Image Courtesy: ANI
லக்னோ,
நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் நேபாளத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்,அதிகாலை 3 மணியளவில் உத்தரபிரதேசம் மகுங்குபூர் அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்தின் டயர் பஞ்சரானது. இதனையடுத்து, டிரைவர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தனர். மேலும்,12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.