சத்தீஸ்கர்: மருத்துவமனையில் 4 மணி நேர மின்வெட்டால் 4 குழந்தைகள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர்: மருத்துவமனையில் 4 மணி நேர மின்வெட்டால் 4 குழந்தைகள் உயிரிழப்பு
Published on

ராய்பூர்,

சத்தீஸ்கரில் மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் 'சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்' இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத் துறைக்கு மாநில சுகாதாரத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார். தகவல்களை சேகரிக்க நேரில் அம்பிகாபூர் மருத்துவமனைக்கு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வுக்குப் பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com