விநாயகருக்கு முழு முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைப்பு!

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-01 07:34 GMT

ராஞ்சி,

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், புது முயற்சியாக, விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


அந்த ஆதார் அட்டை உள்ள தகவலின்படி, விநாயகப் பெருமானின் முகவரி கைலாசம் என்றும் அவர் பிறந்த தேதி, ஆறாம் நூற்றாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய தந்தையின் பெயர் மகாதேவ் என்றும் அதில் குறிப்பிட்டுள்ள முகவரி பின்வருமாறு:-

'கைலாச மலை, மேல்தளம், மானசரோவர் ஏரி அருகில், கைலாஷ், பின்கோடு - 000 001' என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதனை தயாரித்தவர்கள், விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் எண்ணையும் உருவாக்கி இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டையின் தாக்கம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பது பல்வேறு வடிவங்களில் பிரதிபலிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்