ஆமதாபாத்-டெல்லி ரெயில் பெயர் மாற்றம் ரெயில்வே மந்திரி அறிவிப்பு

ஆமதாபாத்-டெல்லி ரெயில் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளார்.
ஆமதாபாத்-டெல்லி ரெயில் பெயர் மாற்றம் ரெயில்வே மந்திரி அறிவிப்பு
Published on

ஆமதாபாத், 

குஜராத் மாநிலத்தில் சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பின் ஆன்மிக குருவாக விளங்கியவர் பிரமுக் சுவாமி மகராஜ். இவரின் ஒரு மாத கால, நூற்றாண்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கிவைத்தார்.இந்நிலையில், ஆமதாபாத்தின் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் பிரமுக் சுவாமி மகராஜ் நகரில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், 'பிரமுக் சுவாமி மகராஜின் நினைவாக, ஆமதாபாத்-டெல்லி இடையே இயக்கப்படும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில், அக் ஷர்தாம் எக்ஸ்பிரஸ் ரெயில் என பெயர்மாற்றம் செய்யப்படும்' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com