தலைமை செயலாளர் தொடர்புடைய பாலியல் வழக்கு அந்தமான் தொழிலதிபர் அரியானாவில் கைது

அரசு வேலை தருவதாக ஆசை காட்டி, 21 வயது இளம்பெண், ஜிதேந்திர நரைன் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார்.

Update: 2022-11-14 21:15 GMT

போர்ட் பிளேர், 

அந்தமான் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். கடந்த செப்டம்பர் மாதம், அரசு வேலை தருவதாக ஆசை காட்டி, 21 வயது இளம்பெண், ஜிதேந்திர நரைன் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரை நரைனும், வேறு சில உயர் அதிகாரிகளும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இவ்வழக்கில், ஜிதேந்திர நரைன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சேர்க்கப்பட்டட அந்தமான் தொழிலதிபர் சந்தீப்சிங், தொழிலாளர் நல ஆணையர் ஆர்.எல்.ரிஷி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பற்றி துப்பு கொடுத்தால், தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அந்தமான் போலீஸ் அறிவித்தது.

இந்தநிலையில், அரியானா மாநிலத்தில் இருந்து சந்தீப்சிங்கின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு விரைந்த அந்தமான் போலீசார், சந்தீப்சிங்கை கைது செய்தனர். மேல்விசாரணைக்காக அவரை அந்தமானுக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்