உத்தரபிரதேசத்தில் இரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ் இயங்காது என அறிவிப்பு

கடும் பனிமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என உ.பி அரசு தெரிவித்துள்ளது.;

Update:2022-12-20 19:40 IST

லக்னோ,

டெல்லி, இமாச்சலபிரதேசம், உத்திரபிரதேசம், பஞ்சாப், அரியானா, மேற்கு உத்தரபிரதேசம்,சண்டிகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி டெல்லியில் ஏற்கனவே கடும் பனிமூட்டம் காரணமாக சாலை போக்குவரத்துகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது உத்திரபிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என உ.பி அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்