வைரகல் விற்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.25 கோடி பறிக்க முயற்சி; 3 பேர் கைது

வைரகல் விற்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.25 கோடி பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-06 18:45 GMT

புலிகேசிநகர்:

பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் தொழில்அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தங்க, வைர நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நாகராஜ் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் 92 காரட் வைரகல் இருப்பதாகவும், அந்த கல்லை வைத்திருப்பவர்கள் நன்மைகள் நடக்கும் என கூறி உள்ளார். அதை உண்மை என நம்பிய தொழில்அதிபர் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அந்த வைரகல்லை முன்பதிவு செய்தார். இதையடுத்து சில நாட்கள் கழித்து தொழில்அதிபரை சந்தித்து பேசிய நாகராஜ், பாலகிருஷ்ணா மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேரை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், அவர்களிடம் தான் அந்த விலை உயர்ந்த வைரகல் இருப்பதாகவும், ரூ.25 கோடி கொடுத்தால் உடனடியாக அந்த கல்லை கொடுப்பதாகவும் கூறி உள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தொழில்அதிபர் பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

மேலும், அவர் புலிகேசிநகர் போலீசில் 3 பேர் மீதும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ், நாகராஜ், பாலகிருஷ்ணா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்