காங்கிரஸ் கட்சி நிலைகுலைவதை பார்ப்பது கவலையளிக்கிறது - உமர் அப்துல்லா

நாட்டின் மிகவும் பழமைவாய்ந்த கட்சி நிலைகுலைவதை பார்ப்பது கவலையளிக்கிறது என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி நிலைகுலைவதை பார்ப்பது கவலையளிக்கிறது - உமர் அப்துல்லா
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமானவர் குலாம்நபி ஆசாத். இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ல பதிவில், நீண்டகாலமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பின்னடைவு குறையவில்லை. சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தை வாசிக்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான கட்சி (காங்கிரஸ்) நிலைகுலைவதை பார்ப்பதற்கு கவலையாகவும், பயமாகவும் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com