பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது அலகாபாத் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு....!

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Update: 2022-11-09 11:47 GMT

அலகாபாத்,

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டில் நடந்த சம்பவத்தின்போது திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. ஆதலால், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுலை செய்து சிபிஐ சிறப்பு கோர்ட்டு கடந்த 2020-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அயோத்தியாவைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், சிபிஐ சிறப்பு கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்