பா.ஜனதா தேசிய செயற்குழு 16, 17-ந் தேதிகளில் கூடுகிறது
பா.ஜனதாவின் உயரிய அமைப்பான தேசிய செயற்குழு இம்மாதம் கூடுகிறது.;
புதுடெல்லி,
பா.ஜனதாவின் உயரிய அமைப்பான தேசிய செயற்குழு இம்மாதம் கூடுகிறது. டெல்லியில், 16 மற்றும் 17-ந் தேதிகளில் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலம், இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.