பெங்களூருவில் பயங்கரவாதிகள் கைதான விவகாரம்: தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றம்

பெங்களூருவில் பயங்கரவாதிகள் கைதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெங்களூருவில் பயங்கரவாதிகள் கைதான விவகாரம்: தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றம்
Published on

பெங்களூரு: பெங்களூரு திலக்நகர் பி.டி.பி. லே-அவுட் 3-வது கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த மாதம் (ஆகஸ்டு) மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், அந்த அமைப்புடன் சேருவதற்காக காஷ்மீரில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. பின்னர் அக்தா கொடுத்த தகவலின்பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியான ஜூபானா என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது கைதான அக்தர் பயங்கரவாத அமைப்புடன் சேர திட்டமிட்டு இருந்ததுடன், பெங்களூரு மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவதற்கு திட்டமிட்டு இருந்ததும், இதற்காக தனியாக வாட்ஸ்-அப் குழு ஒன்றை அவர் தொடங்கி இருந்ததும் தெரிந்தது. இந்த நிலையில் பெங்களூரு திலக்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com