ஹிஜாப் போராட்டம்: மேலும் ஒரு பிரபலம் போலீஸ் காவலில் பலி

ஹிஜாப் போராட்டம் மேலும் ஒரு பிரபலம் போலீஸ் காவலில் பலி மீண்டும் நாடு முழுவதும் போராட்டம் தொஅடங்கியது

Update: 2022-10-31 07:11 GMT

புதுடெல்லி

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றாக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்து போனார்.

இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 29 குழந்தைகள் உட்பட குறைந்தது 234 எதிர்ப்பாளர்கள் அடக்குமுறைகளில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவ படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரானின் சில பகுதிகளில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ஏழாவது வாரத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் 19 வயது சமூக வலைதள பிரபலம், மெஹர்ஷாத் ஷாஹிதி,

கடந்த 26 ந்தேதி போலீஸ் காவலில் தனது உயிரை இழந்தார். ஐஆர்ஜிசி புலனாய்வு தடுப்பு மையத்தில் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானின் ஜேமி ஆலிவர் என்றும் அழைக்கப்படும் பிரபல சமையல்காரரான ஷாஹிதி, இன்ஸ்டாகிராமில் 25,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார் அவர் தனது 20 வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு இறந்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மீண்டும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதற்கிடையில், காவலில் இருந்த சமையல்காரரைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரானிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் மற்றும் அவரது மரணத்திற்கான காரணம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் பிரபல செஃப் 'ஈரானின் ஜேமி ஆலிவர்' அடித்துக் கொல்லப்பட்டார், புதிய போராட்டங்கள் வெடித்தன.

Tags:    

மேலும் செய்திகள்