மும்பை விமான நிலையத்தில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ரூ.18 கோடி மதிப்புள்ள 1,794 கிராம் கொகைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

மும்பை,

எத்தியோப்பியா நாட்டில் உள்ள அடிஸ் அபபா நகரில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலையம் சென்ற அதிகாரிகள் எத்தியோப்பியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கென்யா நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் கினியா நாட்டை சேர்ந்த பெண் பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அதிகாரிகள் அவர்களின் உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையில் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 பிளாஸ்டிக் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்திய ரூ.50 கோடி மதிப்புள்ள 1,794 கிராம் கொகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பயணிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com