கல்லூரி மாணவி மற்றும் நண்பரை காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய கும்பல் - தட்டிக் கேட்டதால் ஆத்திரம்

ஆபாசமாக கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட, கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில், ஆபாசமாக கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட, கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டயம் சென்ட்ரல் சந்திப்பு பகுதியில், மாணவியும், அவரது நண்பரும் உணவகத்தில் உணவருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

அதனை மாணவியும், அவரது நண்பரும் தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், இருவரையும் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com