பஞ்சாப்பில் எல்லை வழியே பயங்கர ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தல்

பஞ்சாப்பில் எல்லை வழியே பயங்கர ஆயுதங்கள், போதை பொருட்களை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப்பில் எல்லை வழியே பயங்கர ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தல்
Published on

சண்டிகர்,

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேர் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை தார்ன்தரன் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளனர்.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவர்கள் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் இருவரும் குர்வீந்தர் சிங் மற்றும் சந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 35 கிராம் ஹெராயின் என்ற போதை பொருள், தோட்டாக்கள் நிரம்பிய 2 கைத்துப்பாக்கிகள், 2 தோட்டா உறைகள், 100 கிராம் ஓபியம் வகை போதை பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் இருந்து கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளது. சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், இதுதவிர வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் ஊடுருவியுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என பஞ்சாப் டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com