உத்தரபிரதேசத்தில் ராமர் பெயர் பொறிக்கப்பட்டு ஆற்றில் மிதந்து வந்த 5 கிலோ எடையுள்ள அதிசய கல்!

உத்தரபிரதேச மாநிலம் மயன்புரி பகுதியில் மிதக்கும் கல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் ராமர் பெயர் பொறிக்கப்பட்டு ஆற்றில் மிதந்து வந்த 5 கிலோ எடையுள்ள அதிசய கல்!
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மயன்புரி பகுதியில் மிதக்கும் கல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் இதனை ராமர் சேது பாலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த கல்லில் கடவுள் ராமர் பெயர் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மாவட்டத்தில் ஓடும் ஈசான் ஆற்றில் இந்த மிதக்கும் கல் தென்பட்டுள்ளது. அந்த கல்லை தூக்கி எடை போட்டு பார்த்தபோது சுமார் 5.7 கிலோ எடை கொண்டுள்ளது.

இந்த நிலையில் அந்த கல் எவ்வாறு தண்ணீரில் மிதக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த சில குழந்தைகள் ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கருப்பு நிறத்தில் ஆற்றில் மிதந்து வரும் கல்லை கண்டுள்ளனர். அதை அவர்கள் கையில் எடுத்து கிராம மக்களிடம் கொண்டு வந்து காண்பித்துள்ளனர். இதை பார்த்த கிராம மக்கள், இந்த கல் இராமாயண காலத்தில் இலங்கைக்கு இராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து வந்துள்ளது என்றும் கூறினர். இதனை தொடர்ந்து, அந்த கல்லை பிரதிஷ்டை செய்து வழிபட முடிவெடுத்துள்ளதாக கிராமத்தினர் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com