ஜிஎஸ்டி வரி வசூல் : செப்டம்பர் மாதம் ரூ.1,62,712 கோடி

செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,62,712 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் : செப்டம்பர் மாதம் ரூ.1,62,712 கோடி
Published on

டெல்லி,

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடாபான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,62,712 கோடி ஆக உள்ளது. இந்தாண்டில் இதுவரை 4 - வது  முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

அதன்படி, மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.29,818 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.83,633 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திலிருந்து மொத்தம் 10,481 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com