ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. ஆனால் பாரம்பரிய விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராட்டம் நடந்தது.

சென்னை மெரினாவில் திரண்டு இளைஞர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை உலகமே வியந்து பார்த்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கடந்த 2017-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் தற்போது தடையின்றி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

ஆனால் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும் பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாததால் இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com