ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரை இறங்கும் வசதி; வெற்றிகரமாக சோதனை ஓட்டம்

ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரை இறங்கும் வசதி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

Update: 2022-12-29 19:29 GMT

ஆந்திர மாநிலத்தில் 16-ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் அவசரமாக தரை இறங்க 4 கி.மீ. தூரத்துக்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வசதியை சோதித்து பார்க்க இந்திய விமானப்படை நேற்று சோதனை ஓட்டம் நடத்தியது. இதில், ஒரு சரக்கு விமானம், 2 சுகோய் போர் விமானங்கள், தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் பங்கேற்றன.

அந்த விமானங்கள், தரை இறங்காமல், தரையை தொட்டபடியும், திடீரென மேலே எழும்பியும் பறந்து ஒத்திகையில் ஈடுபட்டன.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதன்மூலம், தரை இறங்குவதற்கு உகந்ததாக ஓடுதளம் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சோதனை ஓட்டத்தின்போது, தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்களும், விலங்குகளும் நுழைவதை தடுக்க ஓடுதளத்தை சுற்றி இருபுறமும் வேலி அமைக்கும் வேலைகள் பாக்கி இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்