இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு...!
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன் தின பாதிப்பான 19 ஆயிரத்து 673 மற்றும் நேற்றைய பாதிப்பான 16 ஆயிரத்து 464-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 204 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 81 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com