இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியா தொடர்ந்து இலங்கை மக்களுக்கு துணையாக இருக்கும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-07-21 14:20 GMT

Image Courtesy : ANI 

கொழும்பு,

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகிறது.

மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதனால் இலங்கை நாட்டின் 8-வது அதிபராக நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் இந்தியா தொடர்ந்து இலங்கை மக்களுக்கு துணையாக இருக்கும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், "இலங்கைக்கு பொருளாதார உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இந்தியா தொடர்ந்து இலங்கை மக்களுக்கு துணையாக இருக்கும்.

இலங்கையில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்று இருக்கிறார். அவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். நாங்கள் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்