இந்தியாவில் அக்டோபரில் பணவீக்கம் 7% க்கும் கீழே சரிவு - ரிசர்வ் வங்கி ஆளுநர்

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில், 7 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
இந்தியாவில் அக்டோபரில் பணவீக்கம் 7% க்கும் கீழே சரிவு - ரிசர்வ் வங்கி ஆளுநர்
Published on

புதுடெல்லி,

அக்டோபர் மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், நாளை வெளியாக உள்ளன. இந்தநிலையில், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 7.41% ஆக உயர்ந்தது. இது அக்டோபரில் 7% க்கும் கீழே குறையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாத பணவீக்க உயர்வுக்கு, உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்தது எனக்கூறியுள்ளார்.

பணவீக்கம் இந்தியாவிற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. கடந்த 6 - 7 மாதங்களாக, அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்து வந்த நடவடிக்கைகளால், அக்டோபர் மாதத்தில், பணவீக்கம் கட்டுக்குள் வரும் என எதிர்பார்ப்பதாக, சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய பணவீக்க இலக்கான 6 சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேவையில்லை என்றும், 6 சதவீதத்தை தாண்டினால், அது வளர்ச்சியை பாதிக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மேக்ரோ பொருளாதார அடிப்படைகள் வலுவாகவும், மீள்தன்மையுடனும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com