மணிப்பூரில் முடக்கப்பட்டிருந்த செல்போன் இணைய சேவை மீண்டும் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவிப்பு!

இணைய சேவை மற்றும் மொபைல் டேட்டா சேவைகள், உடனடியாக மீண்டும் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூரில் முடக்கப்பட்டிருந்த செல்போன் இணைய சேவை மீண்டும் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவிப்பு!
Published on

இம்பால்,

மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்தது.

மணிப்பூரில், அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம், தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதற்காக பொருளாதார முடக்கத்தை அறிவித்துள்ளது.

அதையொட்டி, வாகனங்கள் எரிப்பு, அலுவலகங்கள் மீது தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், மேலும் வன்முறை பரவுவதை தடுக்க மணிப்பூர் மாநில உள்துறை அமைச்சகம், மாநிலத்தில் செல்போன் இணைய சேவையை துண்டித்தது. கடந்த 7ம் தேதி முதல், இந்த தடை அமலில் இருந்தது.

சமூக விரோத சக்திகள், சமூக வலைத்தளங்கள் மூலம் பொய் செய்திகளை பரப்பி வன்முறையை தூண்டி விடுவதால், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க செல்போன் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

இந்த நிலையில், மணிப்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மற்றும் மொபைல் டேட்டா சேவைகள், இன்றிலிருந்து உடனடியாக மீண்டும் வழக்கம் போல செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com