கர்நாடகா: ஸ்ரீராம் சேனை தலைவர் மீது துப்பாக்கி சூடு

கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனை தலைவர் மற்றும் அவரது வாகன ஓட்டுனர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.
கர்நாடகா: ஸ்ரீராம் சேனை தலைவர் மீது துப்பாக்கி சூடு
Published on

பெலகாவி,

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஹிண்டலகா கிராமத்தில் வாகனம் ஒன்றில் ஸ்ரீராம் சேனை அமைப்பின் தலைவர் ரவி கோகிடகேரா மற்றும் அவரது வாகன ஓட்டுனர் இருவரும் சென்று கொண்டிருந்து உள்ளனர்.

அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்த தாக்குதலில் ரவியின் முக பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவரது வாகன ஓட்டுனரும் தாக்குதலில் படுகாயமடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், ரவி உடல்நலம் தேறியுள்ளார்.

தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய நபர்களை, பெலகாவி கிராமப்புற காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com