பறவை காய்ச்சல் பாதிப்பு - கேரளாவில் 6 ஆயிரம் பறவைகள் அழிப்பு

கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன.

Update: 2022-12-25 06:57 GMT

கோட்டயம்,

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள 3 பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடிய ஒரு வகை நோயாகும்.

கோட்டயம் மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 6,017 பறவைகள், பெரும்பாலும் வாத்துகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டன.

மேலும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து உறைந்த கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்வதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்