மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.4000 கோடி கடனுதவி பெற அரசு முடிவு!

மராட்டிய மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.4000 கோடி கடனாகப் பெறவுள்ளது.
மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.4000 கோடி கடனுதவி பெற அரசு முடிவு!
Published on

மும்பை,

மராட்டியத்தில் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து மராட்டிய மாநில அரசு ரூ.4000 கோடி கடனாகப் பெறவுள்ளது.

மராட்டியத்தில் ஜல்கான், சதாரா, அலிபாக், சிந்துதுர்க், உஸ்மானாபாத், பர்பானி, அமராவதி, ரத்னகிரி, கட்சிரோலி, பண்டாரா மற்றும் அம்பர்நாத் ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாத நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மராட்டிய துணை முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மருத்துவக் கல்வித் துறையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார், இதில் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.4,000 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புக்கொண்டுள்ளதாக மருத்துவக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை மந்திரி கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.

நிதியைப் பெறுவதற்கான தொழில்நுட்ப நடைமுறைகளை மாநில அரசு விரைவில் முடிக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முடிக்க இலக்கு இருப்பதாக அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com