மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெறும் என மிரட்டல் விடுத்த நபர் கைது

1993-ம் ஆண்டு நடந்ததுபோல மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெறும் என மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-01-08 19:55 IST

மும்பை

மும்பை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன் தினம் மாலை மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்தது போல தொடர் குண்டு வெடிப்பு 2 மாதங்களில் மாகிம், பென்டி பஜார், நாக்பாடா, மதன்புரா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்றார்.

குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மும்பையில் மத கலவரத்தை ஏற்படுத்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆட்கர் வர உள்ளனர் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடினர். மிரட்டல் விடுத்தவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் ஜூகு பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மலாடு பகுதியில் மும்பை குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ரவுடி நபி யாக்யா கான் (வயது55) என்பது தெரியவந்தது.

அவர் மீது கொள்ளை, மானபங்கம், நிலஅபகரிப்பு உள்ளிட்ட 12 வழக்குகுள் இருப்பதாகவும் போலீசார் கூறினர். நபி யாக்யாகான் எதற்கு மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி சுமார் 12 இடங்களில் குண்டு வெடித்தது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 257 பேர் பலியானார்கள், 1,400 பேர் படுகாயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்