மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

மிசோரமில் மீண்டும் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
Published on

சாம்பய்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசேரமில் நேற்று இரவு 8.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், மிசோரமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாம்பய் நகரில் இரவு 7.15 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com