2024-ல் பாஜகவே வெற்றி பெறும், மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்: அசாம் முதல் மந்திரி

வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார் என அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
2024-ல் பாஜகவே வெற்றி பெறும், மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்: அசாம் முதல் மந்திரி
Published on

புதுடெல்லி,

வரும் 2024- ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்று அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் பதவிக்கு யார் வேண்டும் என்றாலும் போட்டியிடலாம் அதில் எந்த தவறும் கிடையாது என்று எதிர்க்கட்சிகள் பற்றி குறிப்பிட்ட ஹிமந்த பிஸ்வ சர்மா, வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வெல்லப்போகிறவர்கள் பற்றி எனக்கு அந்த அக்கறையும் இல்லை என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் பாஜகவையும் தனது குருவாக கருதுகிறேன் என்று ராகுல் காந்தி கூறியது பற்றி செய்தியாளர்கள் ஹிமந்த பிஸ்வ சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஹிமந்த பிஸ்வ சர்மா, " ராகுல் காந்தி அப்படி நினைத்தால் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்லட்டும். பாரத மாதாவிற்கு தலைவணங்கிவிட்டு குருதட்சணை செய்து கொள்ளட்டும்" என்றார்.

முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை பாஜக ஆக்ரோஷமாக விமர்சிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அப்போதுதான் தங்கள் சித்தாங்களை புரிந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு உதவிகரமாக இருக்கும். நான் அவர்களை (பாஜகவை) குருவாக கருதுகிறேன். எதை செய்யக்கூடாது என்பதை எனக்கு தெளிவாக அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com