கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி டுவிட்

சர்வதேச அளவிலான பிரச்னைகளால் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் இந்தியாவில் மந்த நிலை ஏற்படாது என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி டுவிட்
Published on

புதுடெல்லி,

கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

இந்திய பெருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கெள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று மத்திய நிதி மந்திரி கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகின்றன. அவர் செல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பெருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்பேது இந்திய பெருளாதாரம் மந்தநிலையை நேக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை '' என சாடியுள்ளார். 

சர்வதேச அளவிலான பிரச்னைகளால் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், நம் நாட்டில் அதுபோன்ற நிலை ஏற்பட பூஜ்ஜிய சதவீதமே சாத்தியமுள்ளது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மாநிலங்களவையில் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com