இமாசலபிரதேசம்: மேகவெடிப்பு ஏற்பட்டதால் கனமழை! நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாவ்நகர் அருகே கின்னார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இமாசலபிரதேசம்: மேகவெடிப்பு ஏற்பட்டதால் கனமழை! நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Published on

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால் பாவ்நகர் அருகே கின்னார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தகவலறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் போக்குவரத்தை சரி செய்ய உதவினர். நிலச்சரிவால் சாலையில் விழுந்துள்ள கற்கள் மற்றும் மண்ணை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இமாச்சல பிரதேச சம்பாவில், கண்ட்வா பகுதியில் வானிலை நிகழ்வான மேகவெடிப்பு ஏற்பட்டதால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com