சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் யாரும் வெளியேறவில்லை - மத்திய அரசு

2019-ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் பண்டிட்கள் 5 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் யாரும் வெளியேறவில்லை - மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தங்கள் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் 5-ல் ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் யாரும் வெளியேறவில்லை.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 128 பேர், பொதுமக்கள் 118 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் அரசின் பல்வேறு அரசுப்பணிகளில் 5 ஆயிரத்து 502 பண்டிட்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டு 417 ஆக இருந்த பயங்கரவாத தாக்குதல் 2021-ம் ஆண்டு 229 ஆக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com