12 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - ஒருவர் மாயம்

ஒடிசாவின் மல்கங்கிரியில் படகு கவிழ்ந்ததில் பொறியாளர் ஒருவர் காணாமல் போனார்.

Update: 2022-09-10 21:44 GMT

மல்கங்கிரி,

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டம் பாடியா பிளாக்கில் குடும்பாலி ஆற்றில் நேற்று முன்தினம் இரவு12 பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் படகில் இருந்த பொறியாளர் ஒருவர் காணாமல் போனார். காணாமல் போன பொறியாளர் கைலாஷ் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

12 பயணிகள், 3 பைக்குகளுடன் சென்ற மோட்டார் படகு ஆற்றை கடக்கும் போது படகில் இருந்த மோட்டார் ஆற்றின் நடுவில் நின்றது. இதையடுத்து படகு சமநிலையை இழந்து கவிழ்ந்தது. 12 பேரில் ஆறு பேர் நீந்திப் பாதுகாப்பாக கரைக்கு வந்தனர். மீதமுள்ள 6 பேரில் 5 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். இருப்பினும், கைலாஷ் ஷா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

படகு கவிழ்ந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியாத நிலையில், அதிக பாரம் ஏற்றியதால் கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்