ஒடிசா சரக்கு ரெயில் விபத்து: 19 ரெயில்கள் ரத்து - இந்தியன் ரெயில்வே தகவல்

கோரே ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
ஒடிசா சரக்கு ரெயில் விபத்து: 19 ரெயில்கள் ரத்து - இந்தியன் ரெயில்வே தகவல்
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கேரே ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்றது. டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் வெற்று சரக்கு ரெயிலின் ஓட்டுநர், திடீரென பிரேக் அடித்ததால், ரெயிலிலிருந்து 8 பெட்டிகள் தடம் புரண்டு, பிளிட்பாரமில் இருந்த பயணிகள் மீது விழுந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோரே ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அறிவித்தார்.

இந்நிலையில், சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக இயக்கப்படும் 19 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 20 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com