பஞ்சாப்: போதைப்பொருளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்..!!

பஞ்சாபில் போதைப்பொருட்களை கொண்டு வந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
பஞ்சாப்: போதைப்பொருளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்..!!
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தின் எல்லையோர பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோன் ஒன்று 20 மீட்டர் தூரத்தில் பறந்தது. எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். அது பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. அதை பாகிஸ்தான் வீராகள் எடுத்துச்சென்றனர்.

இதேபோல் மற்றொரு சம்பவத்தில் அதே எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாசில்கா மாவட்டத்தின் விவசாய இடத்தில் 25 கிலோ போதைப்பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்திய துருப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com