திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
Published on

திருப்பதி,

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதியில் பக்தர்கள் இன்றி தனிமையில் பவித்ர உற்சவம் நடந்தது. இந்த ஆண்டு பவித்ர உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பவித்ர உற்சவத்தில் கலந்து கொள்ள கடந்த 3 நாட்களாக திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

வைகுந்தம் காம்ப்ளக்ஸ் 25 அறைகளும் நிரம்பி நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சுமார் 15 முதல் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 74 ஆயிரத்து 497 பேர் தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 244 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வருகிற சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறை (திங்கட்கிழமை) ஆகியவற்றையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com