பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார். தாயாரின் மறைவை பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார்
Published on

அகமதாபாத்,

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து வந்து தாயாரைப் பார்த்துச் சென்றார்.

அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தார். ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயர் காலாமானார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com