இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டிலிருந்து வெளியான அசத்தல் வீடியோ...!

விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டிலிருந்து வெளியான அசத்தல் வீடியோ...!
Published on

ஐதரபாத்,

ஐதரபாத்தைச் சேர்ந்த "ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்" என்ற தனியார் நிறுவனம், 'விக்ரம் - எஸ்' என்ற பெயரில் ராக்கெட் தயாரித்து நேற்று (நவம்பர் 18) இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 'விக்ரம் - எஸ்' ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டுடன் கேமரா பொறுத்தியுள்ளது, அந்த கேமராவில் பதிவான வீடியோவை வெளியிட்டுள்ளது. ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ, ராக்கெட் புறப்படும்போது பூமியின் காட்சியைக் காட்டுகிறது.

விக்ரம் - எஸ், இந்தியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட முதல் தனியார் ராக்கெட், மற்றும் இது சுதந்திர இந்தியாவிற்கு ஒரு 'புதிய மைல்கல்' ஆக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com