"மம்தா பானர்ஜியுடன் எந்த உடன்பாடும் இல்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்" - முன்னாள் கவர்னர் கருத்து

மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

Update: 2022-08-05 10:21 GMT

புதுடெல்லி,

டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில், இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச உள்ளார்.

இந்த நிலையில் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும், முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவருமான ததாகத்தா ராய், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி இடையே ஏற்படக்கூடிய உடன்பாடு காரணமாக சில திருடர்களும், கொலைகாரர்களும் தப்பி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அத்தகைய உடன்பாடு எதுவும் உங்களுக்குள் ஏற்படவில்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்