ஆயிரக்கணக்கான சிறுமிகள்-பெண்களை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய விபசார கும்பல் கைது

14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள்-பெண்அலை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய மிகப்பெரிய விபசார கும்பலை போலீசார் பிடித்து உள்ளனர்.

Update: 2022-12-07 07:59 GMT

ஐதராபாத்

ஐதராபாத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 18 குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அசாம், மாநிலங்கள்,வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இணையதளம் மூலம் விளம்பரம் செய்து வந்தனர். மேலும், கால் சென்டர், வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு உள்ளனர்.பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்த டெல்லி, பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் தனியாக கால் சென்டர் நடத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் 1400 சிறுமிகள் மற்றும் பெண்களை விபச்சார தொழிலுக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது சைபராபாத் மற்றும் ஐதராபாத் எல்லைக்குள் 39 வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஐதராபாத் மற்றும் சைபராபாத்தில் உள்ள கடத்தல் வழக்குகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் தொடர்புடையவர்கள்.

இந்த குற்றவாளிகள் இதுவரை 14,190 பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி விபச்சார தொழிலில் தள்ளியுள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.இதற்காக ஆடம்பரமான வாழ்க்கை , எளிதாக பணம் சம்பாதிப்பது, வேலை என்று பெண்களை ஆசைவார்த்தை கூறி கடத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்