திகார் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகரை வேறு சிறைக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திகார் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகரை வேறு சிறைக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Published on

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், திகார் சிறையில் இருந்து மண்டோலி சிறைச்சாலைக்கு ஒருவாரத்தில் மாற்ற உத்தரவிட்டுள்ளது.

திகார் சிறையில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுகேஷ் சந்திரசேகரும் அவரது மனைவி தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com